/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரியினங்கள் செலுத்த சிறப்பு முகாம்
/
வரியினங்கள் செலுத்த சிறப்பு முகாம்
ADDED : அக் 17, 2025 11:28 PM
கோவை: மாநகராட்சிக்கு சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் செலுத்த ஏதுவாக சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, இன்று காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, கிழக்கு மண்டலத்தில், 6வது வார்டு காசா கிராண்ட் அபார்ட்மென்ட், 56வது வார்டுக்கு ஒண்டிப்புதுார் சுங்கம் மைதானத்திலும் நடக்கிறது.
மேற்கு மண்டலத்தில், 35வது வார்டுக்கு இடையர்பாளையம், நாகராஜன் நாகம்மாள் கோவில், அன்பு நகர் மூன்றாவது வீதியிலும், 33வது வார்டுக்கு அங்கன்வாடி மையம், சக்தி நகர், புளியமரம் ஸ்டாப், கவுண்டம்பாளையத்திலும் இடம்பெறுகிறது.
வடக்கு மண்டத்தில், 15வது வார்டுக்கு சுப்பிரமணியம்பாளையம் வார்டு அலுவலகம், 19வது வார்டுக்கு மணிகாரம்பாளையம் அம்மா உணவகம், 25வது வார்டுக்கு காந்திமாநகர் வார்டு அலுவலகம் அருகே செல்வ விநாயகர் கோவில் லைனிலும் நடக்கிறது.
தெற்கு மண்டலத்துக்கு, 88வது வார்டு, குனியமுத்துார், தர்மராஜ கோவில் மண்டபத்திலும், மத்திய மண்டலத்தில், 32வது வார்டு சங்கனுார், நாராயணசாமி வீதியில் உள்ள சிறுவர் பூங்கா அருகேயும், 63வது வார்டுக்கு ராமநாதபுரம், பெருமாள் கோவில் வீதி, மாநகராட்சி வணிக வளாகத்திலும் முகாம் இடம்பெறும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.