UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 05:56 PM
அ நிறம் | அளவு
ஆனைமலை: வேட்டைக்காரன்புதுாரில், துாய்மை பணியாளர்கள் நல சிறப்பு முகாம் நடந்தது. அதில், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், கோட்டூர், சமத்துார் உள்ளிட்ட பேரூராட்சிகளை சேர்ந்த துாய்மை பணியாள்கள் பங்கேற்றனர்.
அதில், பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனை, அரசு திட்டங்கள் பதிவு, அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதை தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பணியின் போது பயன்படுத்த வேண்டிய கை கிளவுஸ், மாஸ்க், கண்ணாடி, கால் உறை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
