/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியலில் மாணவர்கள் கல்லுாரிகளில் நடக்கிறது சிறப்பு முகாம்
/
வாக்காளர் பட்டியலில் மாணவர்கள் கல்லுாரிகளில் நடக்கிறது சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் மாணவர்கள் கல்லுாரிகளில் நடக்கிறது சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் மாணவர்கள் கல்லுாரிகளில் நடக்கிறது சிறப்பு முகாம்
ADDED : மே 15, 2025 11:35 PM
கோவை : கல்லுாரியில் பயிலும் 18 வயது நிரம்பிய மாணவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு கல்லுாரி தோறும் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லுாரிகளில் பயின்று வரும், 18 வயது பூர்த்தி அடைந்த மாணவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக, அனைத்து கல்லுாரி முதல்வர்களுடனான கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் கோவை கலெக்டர் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல், இன்ஜினியரிங், மருத்துவம், பார்மசி, பிசியோதெரபி உள்ளிட்ட அனைத்து கல்லுாரிகளில் படிக்கும் 18 வயதுடைய மாணவ மாணவியரின் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வசம் ஒப்படைக்க வேண்டும்.
அந்த பட்டியலில் மாணவர்களது படிப்பு, படிக்கும் ஆண்டு, பிறந்தநாள், வயது ஆகியவற்றை குறிப்பிட்டிருக்க வேண்டும் அப்பட்டியலை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்பட்டியலின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படும். அதன் பின்பு அம்மாணவர் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டிருக்குமேயானால் மாணவர் பெயர் பட்டியலில் சேர்க்கப்படும்.
இதற்கான சிறப்பு முகாம் அந்தந்த கல்லுாரியிலேயே அடுத்தமாதம் நடத்தப்படும். அதற்கு அனைத்து கல்லுாரி முதல்வர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இதில் கோவையிலுள்ள அனைத்து கல்லுாரி முதல்வர்கள் மற்றும் நிர்வாகப்பணியாளர்கள் பங்கேற்றனர்.