தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முதியோர் உதவித்தொகை சிக்கல் தீர்க்க சிறப்பு முகாம்

முதியோர் உதவித்தொகை சிக்கல் தீர்க்க சிறப்பு முகாம்

முதியோர் உதவித்தொகை சிக்கல் தீர்க்க சிறப்பு முகாம்


UPDATED : அக் 15, 2026 03:47 PM

ADDED : அக் 15, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 03:47 PM ADDED : அக் 15, 2026 03:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை தாலுகா அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை பயனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

வால்பாறை தாலுகாவில் 7,607 முதியோர்களுக்கு மாதம் தோறும், 1,200 ரூபாய் வீதம் அவர்களின் வங்கி கணக்கில் உதவித்தொகை வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலான முதியோர்களுக்கு இந்த மாதம் உதவித்தொகை உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை.

வங்கி கணக்குடன் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் முதியோருக்கு உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசின் முதியோர் உதவி தொகை இது வரை கிடைக்காதவர்களுக்கான சிறப்பு முகாம், தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. தனி தாசில்தார் ரமேஷ் தலைமையில் நடந்த முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us