ADDED : செப் 11, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராமகுமார் வரவேற்றார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த் முகாமை துவக்கி வைத்தார்.முகாமில் பத்துக்கும் மேற்பட்ட அரசு துறைகளை சார்ந்த அதிகாரிகள், தனித்தனியாக ஸ்டால்கள் அமைத்து இருந்தனர். முகாமில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள், மருத்துவ பரிசோதனை, மருத்துவ சிகிச்சை, புதிய சான்றிதழ்கள் பெறுதல், சான்றிதழ் புதுப்பித்தல் என பல்வேறு வகையில் பயனடைந்துள்ளனர்.
