/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்.,ல் வரும் 30 வரை சிறப்பு இருதய பரிசோதனை முகாம்
/
கே.எம்.சி.எச்.,ல் வரும் 30 வரை சிறப்பு இருதய பரிசோதனை முகாம்
கே.எம்.சி.எச்.,ல் வரும் 30 வரை சிறப்பு இருதய பரிசோதனை முகாம்
கே.எம்.சி.எச்.,ல் வரும் 30 வரை சிறப்பு இருதய பரிசோதனை முகாம்
ADDED : செப் 19, 2024 11:04 PM
'கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மற்றும் மையங்களில், கடந்த 2ம் தேதி துவங்கிய சிறப்பு இருதய பரிசோதனை முகாம், செப்., 30 வரை நடக்கிறது; பரிந்துரைக்கப்படும் சிகிச்சைக்கு, கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்' என, கே.எம்.சி.எச்., முழு உடல் பரிசோதனை மைய மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
சர்க்கரை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு, உடல் பருமன், புகை பிடித்தல், உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால், இருதய பாதிப்பு மற்றும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக்குக்கு இதுவே காரணம்.
இருதயத்தில் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஈ.சி.ஜி., ரத்தத்தில் கொழுப்பு, ரத்த அழுத்தம், டிஎம்டி, எக்கோ ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக இருதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறிந்து, தேவையான சிகிச்சை அளித்தால் மாரடைப்பை தடுக்கலாம்.
ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை வாயிலாக அடைப்புகள் நீக்கப்படும்.
இருதயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள தினமும் யோகா, தியானம், குறைந்தது, 30 நிமிட உடற்பயிற்சி, புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்த்தல், 7 மணி நேர துாக்கம், அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கே.எம்.சி.எச்.,ல் சிறப்பு இருதய பரிசோதனை முகாம், செப்., 2ல் துவங்கியது; செப்., 30ம் தேதி வரை, தினமும் காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை நடக்கிறது. இதில், சர்க்கரை பரிசோதனை, கொழுப்பு சத்து, ஈ.சி.ஜி., எக்கோ/டிஎம்டி பரிசோதனைகள் ரூ.1,299க்கு மேற்கொள்ளப்படுகிறது; மருத்துவர் ஆலோசனையும் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும், மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைக்கும் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.
முகாம் நடக்கும் இடங்கள்
அவிநாசி ரோடு, கோவில்பாளையம் மற்றும் ஈரோட்டில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை, கோவை ராம்நகரில் உள்ள கே.எம்.சி.எச்., சிட்டி சென்டர், சூலுாரில் உள்ள கே.எம்.சி.எச்., மல்டிஸ்பெஷாலிட்டி.
முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 74188 87411 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.