/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உடல், கண் தானம் திட்டத்துக்கு பிரத்யேக ஒருங்கிணைப்பாளர்' : அரசு மருத்துவமனை டீன் ஆலோசனை

ADDED : நவ 04, 2025 09:11 PM
கோவை: உடல் தானம் பெறுதல் மற்றும் கண் தானம் உள்ளிட்ட செயல்பாடுகளை கண்காணித்து, உடனுக்குடன் வழிகாட்டுதல் வழங்க, பொறுப்பாளர் நியமிக்க, கோவை அரசு மருத்துவமனையில், பிரத்யேக ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படவுள்ளார்.
கோவை, கணபதியை சேர்ந்த டென்னிஸ் என்பவரின் தாயார் லீலா மேரியின் உடலை, தானமாக அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க முயற்சித்த போது, சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து, உடல் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
உடல் தானம் செய்பவர்களுக்கு, தக்க மரியாதை கிடைக்க வேண்டும். உறவினர்களை தேவையற்ற அலைக்கழிப்புக்கு ஆளாக்க கூடாது. வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டியது அவசியம்.
இதுகுறித்து, டீன் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, ''இறந்தவர்களின் உறவினர்கள் உடற்கூராய்வு பிரிவு டெக்னீசியரிடம், போனில் பேசியுள்ளனர். கடந்த முறை உடல் தானம் பெற்றபோது, கோப்புகளில் பெயர்களில் சற்று முரண்பாடு இருந்தது.
''இதனால், உடல் தானம் பெறும் போது கோப்புகள் துணை முதல்வர் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால், டெக்னீசியன் உறவினர்களுடன் கூறியதில், தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. கண் தானம், உடல் தானம் போன்ற செயல்பாடுகளை தாமதம் இன்றி, மேற்கொள்ள பொறுப்பாளர் ஒருவரை பிரத்யேகமாக நியமிக்க ஆலோசித்துள்ளோம்,'' என்றார்.