/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம்! 100 சதவீத தேர்ச்சிக்கு தீவிரம்
/
பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம்! 100 சதவீத தேர்ச்சிக்கு தீவிரம்
பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம்! 100 சதவீத தேர்ச்சிக்கு தீவிரம்
பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம்! 100 சதவீத தேர்ச்சிக்கு தீவிரம்
ADDED : பிப் 18, 2025 10:00 PM
பொள்ளாச்சி; பிளஸ் 1 பாடத்தில் தோல்வி அடைந்து, பிளஸ் 2 வகுப்பில் தொடரும் மாணவர்களைக் கண்டறிந்து, தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 3ம் தேதி துவங்குகிறது. மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து, முக்கிய தேர்வுகள், மார்ச், 11 முதல், 25 வரை நடக்கிறது. அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில், நுாறு சதவீத தேர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தியும், அடிக்கடி அலகு தேர்வு நடத்தியும், தேர்வுக்கு தயார்படுத்தப்படுகின்றனர். அதேநேரம், பிளஸ் 1 பாடத்தில் தோல்வி அடைந்து, பிளஸ் 2 வகுப்புக்கு முன்னேறிய மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், பிளஸ் 2 வகுப்புக்கு முன்னேறி படித்து வருகின்றனர். இவர்களில் சிலர், உடனடித் தேர்விலும் தோல்வியை சந்தித்துள்ளனர். அவர்களால், பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படும்.
அதனால், அவர்களைக் கண்டறிந்து, தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 பாடங்களுடன், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடத்தை கற்பிக்கவும் ஆசிரியர்கள் முனைப்பு காட்டுகின்றனர்.
இந்த மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களில் தேர்ச்சி பெற்றாலும், தேர்ச்சி பெறாத பிளஸ் 1 பாடத்தை 'கிளியர்' செய்யவில்லை என்றால், கல்லுாரியில் சேர இயலாது. அதனால், அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு, கூறினர்.