/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்
/
இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : நவ 21, 2025 06:55 AM
அன்னுார்: பொகலூர், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சிகளில், இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
100 நாள் திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 2024ம் ஆண்டு ஏப். 1 முதல், 2025ம் ஆண்டு மார்ச் 31 வரை நடைபெற்ற பணிகள் குறித்து சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது.
மசக்கவுண்டன் செட்டிபாளையம் மற்றும் பொகலூர் ஊராட்சிகளில், கடந்த 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை சமூகத் தணிக்கை நடந்தது.
கடந்தாண்டு செய்யப்பட்ட பணிகள் அளவீடு செய்யப்பட்டன. இதுகுறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டது. இன்று பொகலூர் மற்றும் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சிகளில் காலை 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில் சமூக தணிக்கை அறிக்கை வாசிக்கப்படுகிறது.
எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது. எவ்வளவு தொழிலாளர்களுக்கு வேலை தரப்பட்டது. என்ன பணிகள் முடிக்கப்பட்டன. கண்டறியப்பட்ட ஆட்சேபனைகள் என்ன, என வாசிக்கப்படுகிறது.
'சம்பந்தப்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கலாம்,' என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

