/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் இன்று முதல் மார்கழி சிறப்பு பூஜை
/
கோவில்களில் இன்று முதல் மார்கழி சிறப்பு பூஜை
ADDED : டிச 15, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; இன்று மார்கழி மாத முதல் நாள் துவக்கத்தை ஒட்டி பெருமாள் கோவில்களில் அதிகாலை திருப்பாவை பாடல் பாடி, சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோவனுார் செல்லும் வழியில், 11 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை உள்ளது. இங்கு ரங்கநாதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் அதிகாலையில் மார்கழி சிறப்பு பூஜை நடக்கிறது. அப்போது ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்படுகிறது.
பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் மார்கழி சிறப்பு பூஜை நடக்கிறது.