/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொங்காலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
/
கொங்காலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED : ஜன 16, 2025 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் அருகே கொங்காலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், மோத்தேபாளையம் கிராமத்தில் கொங்காலம்மன் கோவில் உள்ளது. காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து, அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.