ADDED : செப் 29, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை சின்னபொம்மன் சாளையிலுள்ள விநாயகர் கோவிலில், மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
உடுமலை அருகேயுள்ள சின்ன பொம்மன் சாளை கிராமத்திலுள்ள, விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டும், மழை வேண்டியும், சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 திரவியங்களில், சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, மழை வேண்டி, பச்சை மண் பானையில் சுவாமிக்கு பொங்கல் வைத்து, சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
