ADDED : செப் 25, 2024 08:48 PM

மேட்டுப்பாளையம்: புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம் சிவன்புரம் அருகே, ஆசிரியர் காலனியில், ஸ்ரீராஜ அஷ்ட விமோசன மகா கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் வடுக பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. புரட்டாசி மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
விநாயகர், அஷ்டதிக் பாலகர்கள், பைரவர், நவகிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு ஆவாகன பூஜை செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்தியஞ்ச ஹோமம், தன்வந்திரி ஹோமம், வடுக பைரவருக்கு ஹோமம் நடைபெற்றது.
பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி ஆகியவற்றால் வடுக பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பைரவருக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜையை லட்சுமி நாராயண அர்ச்சகர் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.