/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடகோவை குஜராத்தி சமாஜத்தில் மா.கம்யூ., சிறப்பு கருத்தரங்கம்
/
வடகோவை குஜராத்தி சமாஜத்தில் மா.கம்யூ., சிறப்பு கருத்தரங்கம்
வடகோவை குஜராத்தி சமாஜத்தில் மா.கம்யூ., சிறப்பு கருத்தரங்கம்
வடகோவை குஜராத்தி சமாஜத்தில் மா.கம்யூ., சிறப்பு கருத்தரங்கம்
ADDED : மார் 17, 2025 12:32 AM

கோவை; மா.கம்யூ., சார்பில் சிறப்பு கருத்தரங்கம், வடகோவையில் உள்ள குஜராத்தி சமாஜத்தில் நேற்று நடந்தது. மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் ராதிகா தலைமை வகித்தார்.
இதில், அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேசியதாவது:
அனைத்து மொழிகளுக்கும், சம அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதுதான் ம.கம்யூ., கொள்கை. 1967ம் ஆண்டு லோக்சபாவில், அலுவலக மொழி திருத்த மசோதா கொண்டு வந்த போது, கம்யூனிஸ்ட்கள் தாய் மொழிக்குதான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, லோக்சபா மற்றும் சட்டசபைகளில் வலியுறுத்தி பேசினர். எந்த மொழியையும் திணிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினர். தாய்மொழிதான் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழியாகவும், கல்வி கற்கும் மொழியாகவும், நீதி மன்ற மொழியாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கேரள எம்.பி., ஜான் பிரிட்டாஸ், முன்னாள் எம்.பி., நடராஜன், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர்.