/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமுகை வனப்பகுதியில் சிறப்பு குழு கண்காணிப்பு; வேட்டைக்காரர்கள் உள்ளனரா?
/
சிறுமுகை வனப்பகுதியில் சிறப்பு குழு கண்காணிப்பு; வேட்டைக்காரர்கள் உள்ளனரா?
சிறுமுகை வனப்பகுதியில் சிறப்பு குழு கண்காணிப்பு; வேட்டைக்காரர்கள் உள்ளனரா?
சிறுமுகை வனப்பகுதியில் சிறப்பு குழு கண்காணிப்பு; வேட்டைக்காரர்கள் உள்ளனரா?
ADDED : ஜன 20, 2025 11:18 PM

மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் அடர்ந்த வனப்பகுதிகளில் அந்நியர்கள், வேட்டை கும்பல்கள் நடமாட்டம் உள்ளதா என சிறப்பு குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சீராஜ் நகர் பகுதியில், வீடு ஒன்றில் அண்மையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இதுதொடர்பாக, மேட்டுப்பாளையம் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன் ஒருபகுதியாக சிறுமுகை வனப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்நியர்கள், வேட்டை கும்பல்கள் நடமாட்டம் ஏதாவது உள்ளதா, என 24 மணி நேரமும் அடர் வனப்பகுதியில் சிறப்பு குழுவினர் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, சிறுமுகை வனத்துறையினர் கூறியதாவது:-
வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதியின் பாதுகாப்பிற்காக, சிறுமுகை வனப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளான ஓடந்துறை, கூத்தாமண்டி வடக்கு, தெற்கு, பெத்திக்குட்டை, குஞ்சப்பனை, உலியூர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்டை கும்பல்கள், அந்நியர்கள் நடமாட்டம் உள்ளதா என சிறப்பு குழு அமைக்கப்பட்டு, இரவு, பகல் என 24 மணி நேரமும் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகிறோம். அதேபோல் அவுட்டுகாய்கள், நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாகவும், சந்தேகிக்கும் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வனப்பகுதிக்கு அருகில் உள்ள கிராம மக்களுக்கு அந்நியர்கள் நடமாட்டம் தொடர்பாக விழிப்புணர்வு, வனத்துறையினரால் வழக்கப்பட்டு வருகிறது. மேலும், வனவிலங்குகளின் பாகங்கள் போன்றவற்றை யாராவது விற்பனை செய்ய வருகின்றனரா எனவும் விசாரித்து வருகின்றனர்.----