போத்தனுார், கோவையில் இருந்து சிறப்பு ரயில் இயக்க எதிர்பார்ப்பு
போத்தனுார், கோவையில் இருந்து சிறப்பு ரயில் இயக்க எதிர்பார்ப்பு
ADDED : அக் 01, 2026 07:35 AM
கோவை: பல மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் ரயில்களில் கோவை வந்து செல்கின்றனர்.
தீபாவளி சமயத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும் பஸ் ஸ்டாண்ட்களில் கூட்டம் அலைமோதுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, அலைச்சலை தவிர்க்கும் விதமாக கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அதன்படி, 'போத்தனுார், பொள்ளாச்சி, பழநி வழியாக கோவை-ராமேஸ்வரம், கோவை-போடிநாயக்கனுார், கோவை-துாத்துக்குடி இடையே சிறப்பு ரயில், போத்தனுார், பொள்ளாச்சி, திண்டுக்கல், அருப்புக்கோட்டை வழியாக போத்தனுார்-கொல்லம், திருச்சி, மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக போத்தனுார்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.
பழநி, திண்டுக்கல், திருச்சி, திருவாரூர், நாகை வழியாக போத்தனுார்-காரைக்கால், நாகர்கோவில் வழியாக கோவை-திருவனந்தபுரம், கோவை, சேலம் வழியாக போத்தனுார்-புதுச்சேரி இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்' என, போத்தனுார் ரயில் பயனாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
