ADDED : ஆக 15, 2026 02:00 PM
அ நிறம் | அளவு
கோவை: மாநகர போலீஸ் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றும், ஐந்து மோப்ப நாய்களுக்கு, கடந்த பிப்.,16 முதல் ஆக., 14 வரை 6 மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவில், 4 நாய்கள் மற்றும் ஒரு தடயவியல் மோப்ப நாய்க்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு பெற்ற நாய்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியை, போலீஸ் கமிஷனர் கண்ணன் பார்வையிட்டார்.
இந்த மோப்ப நாய்கள் இனி கரூர், நாகப்பட்டினம், விருதுநகர் மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
