/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம்
/
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம்
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம்
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம்
ADDED : நவ 12, 2025 11:22 PM
வால்பாறை: வால்பாறையில் நடப்பு கல்வியாண்டில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 753 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் வரும், 2026ல் சட்டசபை தேர்தல் நடப்பதையொட்டி, பொதுத்தேர்வை விரைந்து முடிக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் பிப்.,மாதம் முதல் பொதுத்தேர்வுகள் நடக் கவுள்ளன.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட வால்பாறையில், 2025-26ம் ஆண்டு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 418 மாணவ, மாணவர்களும், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 335 மாணவ, மாணவியரும் தேர்வு எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக, ஏழு தேர்வு மையங்களும், பிளஸ்2 வுக்கு நான்கு தேர்வு மையங்களும் அமைக்கப்படவுள்ளன. பொதுத்தேர்வுக்கான அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஆசிரி யர்கள் திட்டமிட்டுள்ளனர்.

