sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

/

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு


ADDED : ஜன 14, 2025 11:58 PM

Google News

ADDED : ஜன 14, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன், சுவாமி தரிசனம் செய்தனர்.

n கோட்டை ஈஸ்வரன் கோவிலில், நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகம் மாவிலை தோரணங்கள், கரும்புகள் கொண்டு அழகுபடுத்தப்பட்டிருந்தது. சங்கமேஸ்வரசுவாமிக்கு சகலதிரவிய அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள், குடும்ப சகிதமாக வழிபட்டனர்.

n புலியகுளம் முந்திவிநாயகர் கோவிலில், பெரிய விநாயகர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

n பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில், 10,008 கரும்புகளால் வன அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

n கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில், மும்பெரும் தேவியருக்கு வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தேவியருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

n ஈச்சனாரி விநாயகர் கோவிலில், சுவாமிக்கு தங்கக்காப்பு சாற்றப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர்.

n கோவை பீளமேடு புதுார் திருமகள் நகர், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில், 1,008 கரும்புகளை கொண்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

n கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா கோவிலில் சுவாமிகளுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

n கோவை கணபதி மாநகரில் உள்ள ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.

n கோனியம்மன், தண்டுமாரியம்மன், கோட்டை மேடு கரிவரதராஜ பெருமாள், உக்கடம் லட்சுமிநரசிம்மர், பேட்டை விஸ்வேஸ்வரசுவாமி, சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி கோவில்களில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.






      Dinamalar
      Follow us