/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி; கலெக்டர் அழைப்பு
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி; கலெக்டர் அழைப்பு
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி; கலெக்டர் அழைப்பு
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி; கலெக்டர் அழைப்பு
ADDED : செப் 30, 2024 11:47 PM
கோவை : பள்ளி கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு, பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு கோவையிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும், 15, 16, ஆகிய இரு நாட்கள் கோவை, அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், பேச்சுப்போட்டி நடக்கிறது.
இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 5,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 3,000 ரூபாயும், மூன்றாம்பரிசாக, 2,000 ரூபாயும், வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும், பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவரை தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை 2,000 ரூபாய்- வீதம் வழங்கப்படும்.
பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவர்களிடையே முதற்கட்டமாக கலைஞர் தமிழ்மன்றம் வாயிலாக, முதல் சுற்று பேச்சுப்போட்டிகளை கீழ்நிலையில் நடத்தி, மாணவர்களை தேர்வு செய்வர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க, முதன்மை கல்வி அலுவலர் வழியாகவும், கல்லூரிப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் பெயர் பட்டியல், கல்லூரி முதல்வர் வாயிலாகவும் tamilvalar.cbe@gmail.com என்ற மின்னஞ்சலில், வரும் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.