/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கான ஆன்மீக, கலாசார வகுப்புகள்
/
பள்ளி மாணவர்களுக்கான ஆன்மீக, கலாசார வகுப்புகள்
ADDED : அக் 06, 2025 12:06 AM
கோவை; இந்து மதம் மற்றும் பாரம்பரிய கலாசாரத்தின் பெருமைகள் மற்றும் நடைமுறைகளை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 'வித்யாம்ருதம்' வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. ராம்நகர், சாஸ்திரி சாலையில் உள்ள சபர்பன் அகாடமி ஆப் ஆர்ட்சில் கலாசார வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
இதன் தலைவரும், பாரதீய வித்யா பவனின் முன்னாள் பதிவாளர் பிரபாகர் ராவ் கூறுகையில், '' ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும், எளிய ஸ்லோகங்களும், தேசத்தின் ஆன்மீக மகான்களைப் பற்றியும் எளிய முறையில் கற்பிக்கப்படும், '' என்றார்.
நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் காலை 10.00 மணிக்கு வகுப்புகள் நடைபெறும். வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள மனரீதியாகவும், ஆன்மீகரீதியாகவும் மாணவர்களை தயார்படுத்த இது உதவும் என்று இதன் ஒருங்கிணைப்பாளரான கிருஷ்ண குமார் தெரிவித்தார்.