/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு
/
அரங்கநாதர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED : அக் 21, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : காரமடையில் உள்ள எஸ்.வி.டி., அறக்கட்டளை சார்பில், புரட்டாசி மாதத்தின் ஐந்தாவது சனிக்கிழமை, 361வது வார ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, அரங்கநாதர் கோவிலில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிர்வாகி அமரகவி தலைமை வகித்தார். சக்திவேல் வரவேற்றார். ஆன்மிக பேச்சாளர் திலகவதி, 'உண்டு என்பவரும், இல்லை என்பவரும்' என்ற தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ கலாச்ஷேத்ரா நாட்டிய பள்ளி மாணவிகளின், நடன நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் கோவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ராஜேந்திரன் நன்றி கூறினார்.

