sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திடீர், திடீரென முளைக்கும் விளையாட்டு சங்கங்கள்; வீரர், வீராங்கனைகள் இடையே அதிகரிக்கும் குழப்பம்

/

திடீர், திடீரென முளைக்கும் விளையாட்டு சங்கங்கள்; வீரர், வீராங்கனைகள் இடையே அதிகரிக்கும் குழப்பம்

திடீர், திடீரென முளைக்கும் விளையாட்டு சங்கங்கள்; வீரர், வீராங்கனைகள் இடையே அதிகரிக்கும் குழப்பம்

திடீர், திடீரென முளைக்கும் விளையாட்டு சங்கங்கள்; வீரர், வீராங்கனைகள் இடையே அதிகரிக்கும் குழப்பம்


ADDED : மே 29, 2025 12:14 AM

Google News

ADDED : மே 29, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : போலியான பெயரில் கேரம் விளையாட்டு சங்கங்கள் துவங்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழும் நிலையில், போட்டி தகுதி விஷயத்தில் வீரர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்கீழ் அங்கீகாரம் பெற்ற கூடைப்பந்து, கபடி, கால்பந்து, கேரம் என, 39 சங்கங்கள், வீரர், வீராங்கனைகளிடம் மறைந்துள்ள திறமை வெளிக்கொணர்ந்து, அவர்களை மாநில, தேசிய, சர்வதேசம் என அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்கின்றன.

தமிழ்நாடு கேரம் சங்கத்தை பொறுத்தவரை, இச்சங்கத்தில் பதிவு செய்துள்ள அந்தந்த மாவட்ட சங்கங்கள், பள்ளி, கல்லுாரி அளவில், முதல்வர் கோப்பை உள்ளிட்ட போட்டிகளை நடத்தி வீரர்களை ஊக்குவித்து வருகின்றன.

அதேசமயம், பணம் சம்பாதிக்கும் நோக்கில் கேரம் சங்கங்கள் முளைத்துவருவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதனால், எந்த சங்கம் அங்கீகரிக்கப்பட்டது என்பது தெரியாமல் வீரர், வீராங்கனைகள் பலர் குழப்பத்துக்கு ஆளாகின்றனர்.

கோயம்புத்துார் டிஸ்ட்ரிக்ட் கேரம் அசோசியேஷன் செயலாளர் தங்ககுமார் கூறியதாவது:

தமிழ்நாடு கேரம் சங்கத்தில் பதிவு செய்துள்ள எங்கள் சங்கத்தினர் பள்ளி, கல்லுாரிகளில் கேரம் விளையாட்டு போட்டிகளை நடத்திக்கொடுக்கின்றனர். சிலர் மக்களை திசை திருப்பி பணம் சம்பாதிக்கும் நோக்கில், போலியாக கேரம் சங்கம் துவங்கியுள்ளனர்.

நாங்கள் நடத்தும் போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள்தான், மாநில அளவிலான உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இதர சங்கம் வாயிலாக செல்பவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். போலியான பெயரில் கேரம் சங்கம் துவங்கப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு கேரம் சங்கத்திடம் புகார் அளித்துள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

போலியான பெயரில் கேரம் சங்கங்கள் குறித்து கேட்டறிய, கோயமுத்துார் மாவட்ட கேரம் சங்க தலைவர் பட்டீஸ்வரனை பல முறை தொடர்புகொண்டும், அவர் மொபைல் அழைப்பை ஏற்கவில்லை.

'செக்' செய்கிறோம்!


கோவை மண்டல முதுநிலை மேலாளர் அருணாவிடம் கேட்டபோது,''தமிழ்நாடு கேரம் சங்கத்தில் பதிவு செய்துள்ள சங்கமே அங்கீகாரமுடையது. அது நடத்தும் போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களே மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியும். கேரம் சங்கங்கள் எந்த பெயரில், எப்போது பதிவு செய்துள்ளனர் என்பது குறித்து 'செக்' செய்கிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us