/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள்
/
கோவை விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள்
ADDED : நவ 21, 2025 06:52 AM
பெ.நா.பாளையம்: கோவை விழாவின் ஒரு பகுதியாக இன்று வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில், விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன.
இந்த விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் ஆண்கள், பெண்கள் இருபாலாரும் பங்கேற்கலாம். முதல் குழுவில், 20 முதல், 30 வயது வரை உள்ளவர்களும், இரண்டாவது குழுவில், 31 முதல், 50 வயது வரை உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு எறிதல், தட்டு எறிதல், தொடர் ஓட்டம், 100, 400, 1500 மீட்டர், ஓட்ட போட்டிகள் மற்றும், 2000 மீட்டர் நடந்து செல்லும் போட்டிகள் நடக்கின்றன.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவர்கள், ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி கோவை விழா விளையாட்டு போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், செல்: 98657 06011 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

