/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வஜன பள்ளியில் விளையாட்டு விழா
/
சர்வஜன பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : பிப் 05, 2025 12:49 AM

கோவை; பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப் பள்ளியில், விளையாட்டு விழா நேற்று நடந்தது.
மாணவ, மாணவியருக்கு, 100 மீ., 400 மீ., 800 மீ., 1,000 மீ., 400 மீ., தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கிரிஷாந்த், மாணவியர் பிரிவில் கனிஷ்கா, 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் சஞ்சய், மாணவி சுவாதி, 17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் ரகுநாதன், மாணவி சத்யாஸ்ரீ, 19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் நிசாந்த்ராஜ், மாணவி பூமிகா ஆகியோர், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றனர்.
ஆசிரியர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு, ஜெ.இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் சேர்மன் ஜெகதீசன், பள்ளி செயலாளர் நாராயணசாமி, தலைமையாசிரியர் சசிக்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.