/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளி விளையாட்டு விழா
/
ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளி விளையாட்டு விழா
ADDED : நவ 21, 2025 06:47 AM

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 60 வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.பள்ளி முதல்வர் பங்கஜ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் சுந்தர வடிவேலு, பள்ளி தலைவர் மஹாவீர் போத்ரா தேசியக் கொடியை ஏற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.
பள்ளி துணைத் தலைவர் கமலேஷ் பாப்னா, பள்ளி இணை பொருளாளர் நிஷாந்த் ஜெயின் கோவை நலச்சங்க கொடியை ஏற்றி வைத்தனர்.
எஸ்.என்.வி., குளோபல் பள்ளி முதல்வர் சாம்சன் மற்றும் எஸ்.என்.வி., பள்ளி முதல்வர் பங்கஜ் ஆகியோர் பள்ளியின் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். மாணவர்களின் அணிவகுப்பு, யோகா, இசைக்குழு அணிவகுப்பு, கூட்டு உடற்பயிற்சி, கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

