/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ராமகிருஷ்ணா 'ஸ்ரதி' புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
ஸ்ரீ ராமகிருஷ்ணா 'ஸ்ரதி' புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா 'ஸ்ரதி' புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா 'ஸ்ரதி' புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜன 11, 2026 05:08 AM

கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம் (ஸ்ரதி) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன், ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், ஒப்பந்தம் கையொப்பமானது.எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் பேசுகையில், “இப்பயிற்சி வழக்கமான வகுப்பறை கற்பித்தலுக்கு அப்பாற்பட்டது. உண்மையான பணிச்சூழலை பிரதிபலிக்கும் வகையில் நவீன இயந்திரங்கள், கருவிகள் மற்றும் தொழில்ரீதியாக உருவகப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகளை ஸ்ரதி வழங்கும்,” என்றார்.
இந்த ஒப்பந்தம் வாயிலாக டி.என். ஸ்கில்ஸ் 2025 திட்டத்தின் கீழ் அங்கீகரிப்பட்ட பயிற்சி பங்குதாரராக, ஸ்ரதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிளம்பிங் மற்றும் ஹீட்டிங் துறையில், உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வழங்கப்படும்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநர் கிராந்தி குமார், ஸ்ரதி இயக்குநர் பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

