/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏழாவது வெற்றிக் கோப்பையை தனதாக்கிய ஸ்ரீ சக்தி கல்லுாரி
/
ஏழாவது வெற்றிக் கோப்பையை தனதாக்கிய ஸ்ரீ சக்தி கல்லுாரி
ஏழாவது வெற்றிக் கோப்பையை தனதாக்கிய ஸ்ரீ சக்தி கல்லுாரி
ஏழாவது வெற்றிக் கோப்பையை தனதாக்கிய ஸ்ரீ சக்தி கல்லுாரி
ADDED : அக் 29, 2025 12:38 AM

கோவை: எல் அண்டு டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், அண்ணா பல்கலை சார்ந்த கல்லுாரிகளுக்கிடையேயான 9வது மண்டல அளவிலான ஆடவர் கைப்பந்து போட்டி நடந்தது. கோவையைச் சேர்ந்த பல்வேறு பொறியியல் கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லுாரி மாணவர் அணி, காலிறுதியில் பி.எஸ்.ஜி., ஐடெக் மாணவர் அணியை, 25க்கு 10 மற்றும், அரையிறுதியில் கே.பி.ஆர்., கல்லுாரி அணியை 21க்கு 22 என்ற புள்ளி வித்தியாசத்தில் வென்றது.
இறுதிச்சுற்றில் பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணியை எதிர்கொண்ட ஸ்ரீ சக்தி பொறியில் கல்லுாரி, 43க்கு 31 என்ற புள்ளி வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லுாரி மாணவர்கள், ஏழாவது வெற்றிக் கோப்பையை பெற்று, சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

