/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ சங்கர ஜெயந்தி வைபவம் ராமர் கோவிலில் கோலாகலம்
/
ஸ்ரீ சங்கர ஜெயந்தி வைபவம் ராமர் கோவிலில் கோலாகலம்
ADDED : மே 01, 2025 06:15 AM
கோவை : ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், இன்று ஸ்ரீ சங்கரஜெயந்தி வைபவம், பக்தர்கள் சூழ மிக விமரிசையாக நடைபெறுகிறது.
ராம்நகர் கோதண்டராமர் கோவிலில், ஸ்ரீ சங்கரஜெயந்தி வைபவம், இன்று காலை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. வழக்கமான யாகசாலை பூஜைகளை, தொடர்ந்து ஸ்ரீமத்அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில், ஆதிசங்கரர் திருவுருவம் எழுந்தருளப்படுகிறது, மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
மாலை 5:45 மணிக்கு ராம்நகர் திருப்பாவை, திருவெம்பாவை கமிட்டியர் நாமசங்கீர்த்தனங்களை பாராயணம் செய்ய, ஆதிசங்கரர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளுவித்து, மங்களவாத்தியங்கள் முழங்க, ராம்நகர் வீதிகளில் திருவீதி உலா வருகிறார்.
மாலை 6:30 மணிக்கு, ஆச்சார்யா ஸ்ரீ ரங்காஜி மற்றும் ஆச்சார்யா ஸ்ரீமதி சூர்யாப்ரியாஜி ஆகியோர், சங்கரஜெயந்தி சத்சங்கத்தை நிகழ்த்துகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை, ராமர் கோவில் தலைவர் நாகசுப்ரமணியம் மற்றும் அறங்காவலர் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.