/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.எஸ்.குளம் குறுமைய கபடி போட்டி; இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி அதிரடி
/
எஸ்.எஸ்.குளம் குறுமைய கபடி போட்டி; இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி அதிரடி
எஸ்.எஸ்.குளம் குறுமைய கபடி போட்டி; இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி அதிரடி
எஸ்.எஸ்.குளம் குறுமைய கபடி போட்டி; இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளி அதிரடி
ADDED : ஆக 06, 2025 10:33 PM
கோவை; எஸ்.எஸ்.குளம் குறுமைய விளையாட்டு போட்டிகள் குமரகுரு கல்வி நிறுவனம், நேரு ஸ்டேடியம் உள்ளிட்ட இடங்களில் நடக்கின்றன. வளைகோல் பந்து, கால் பந்து, கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, கோ-கோ போட்டிகளில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
இதில், 17, 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பால் பேட்மின்டன் இறுதி போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும், டி.கே.எஸ்.பள்ளி இரண்டாம் இடத்தையும் தட்டிச்சென்றன. 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி முதலிடத்தையும், ஆனையூர் அரசுப் பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
ஹாக்கி போட்டியில்(14 வயதுக்குட்பட்டோர்) கே.ஜி.மெட்ரிக் பள்ளி, செயின்ட் மேரிஸ் பள்ளி ஆகியன முதல் இரு இடங்களையும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கே.ஜி.மெட்ரிக் பள்ளியும், கே.வி.மெட்ரிக் பள்ளியும் முதல் இரு இடங்களை பிடித்தன.
19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வி.சி.எஸ்.எம்.பள்ளி, கே.ஜி.பள்ளி ஆகியன முதல் இரு இடங்களை வென்றன.
14 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான ஹாக்கி போட்டியில், கே.ஜி.மெட்ரிக், புனித அந்தோணியார் பள்ளி மாணவியர் முதல் இரு இடங்களை பிடித்தனர்.
14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில், புனித அந்தோணியார் பள்ளியும், இடிகரை அரசுப் பள்ளியும் முதல் இரு இடங்களை பிடித்தன.