/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 14, 2025 11:50 PM

மேட்டுப்பாளையம்; சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில், மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில், 272 பேர் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் தேர்வு எழுதிய அனைவரும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவர் தஷ்வந்த், சுவஸ்திக்சரன் ஆகியோர் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றனர். தேவதர்ஷினி, சகானா ஸ்ரீ ஆகியோர் 491 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றனர். அவனிஸ், ஹர்ஷித் ஆகியோர் 490 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றனர்.
480 மதிப்பெண்களுக்கு மேல் 22 பேரும், 470க்கு மேல் 47 பேரும், 450க்கு மேல் 97 பேரும், 400க்கு மேல் 178 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் மணிமேகலை மோகன், செயலர் மோகன் தாஸ் மற்றும் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.