/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்; வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 13, 2025 08:55 PM
அன்னுார்; ' உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், குறுகிய அவகாசத்தில், அதிக முகாம் நடத்துவதை கண்டித்து, வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது. இரண்டாம் கட்டமாக நேற்று ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் வட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அளவுக்கு அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைக்க வேண்டும். போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். நிதி ஒதுக்கி, அடிப்படை கட்டமைப்பு வசதி செய்ய வேண்டும்.
வருவாய் துறையில் காலியாக உள்ள நூற்றுக்கணக்கான அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 2023ம் ஆண்டு கலைக்கப்பட்ட 97 பேரிடர் மேலாண்மை பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். சான்றிதழ் வழங்குவதற்கும், அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் அனைத்து தாலுகாக்களிலும் சிறப்பு துணை தாசில்தார் பணியிடம் ஏற்படுத்த வேண்டும்.
பணி பளு மற்றும் பணித்தன்மைக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதை மீண்டும் 25 சதவீதம் ஆக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
வருவாய் ஆய்வாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.