/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
/
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : செப் 15, 2025 10:34 PM
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே அசோகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், எலும்பு மூட்டு சிகிச்சை, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் மகளிருக்கான மருத்துவம், மனநலம், கண் மருத்துவம், கருப்பை புற்றுநோய் பரிசோதனை, குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், தோல் மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பாக மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கி, மருந்து மாத்திரைகளை வழங்கினர். முகாமில், இலவசமாக இ.சி.ஜி., எக்கோ, ஸ்கேன் எடுக்கப்பட்டன. மேலும், சிறுநீர், ரத்தம், சளி ஆகியவற்றுக்கு இலவச பரிசோதனை நடந்தது.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வட்டார தாளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.