sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உலகத்தர மோட்டார்களை உற்பத்தி செய்யும் ஸ்டார்க் மோட்டார்ஸ்

/

உலகத்தர மோட்டார்களை உற்பத்தி செய்யும் ஸ்டார்க் மோட்டார்ஸ்

உலகத்தர மோட்டார்களை உற்பத்தி செய்யும் ஸ்டார்க் மோட்டார்ஸ்

உலகத்தர மோட்டார்களை உற்பத்தி செய்யும் ஸ்டார்க் மோட்டார்ஸ்


ADDED : செப் 30, 2025 10:50 PM

Google News

ADDED : செப் 30, 2025 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ம த்திய அரசு நிறுவனமா திருச்சி, பாரத் ஹெவி எலக்டிரிக்கல்ஸ் நிறுவனத்தில் பணி செய்துகொண்டிருந்த முத்துசாமி 13 ஆண்டுகளுக்கு பிறகு, சுய தொழில் துவங்க வேண்டும என விரும்பினார். 1984ம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்து விட்டு, தனது சொந்த கிராமமான காளப்பட்டியில் ஸ்டார்க் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக உதவியுடன் துவங்கினார்.

ஆரம்ப காலங்களில் சிறிய மோட்டார்களை உற்பத்தி செய்து வெட் கிரைண்டர்கள், வாசிங் மெசின்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்தார். படிப்படியாக இன்ஜினியர்ஸ், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு தேவைப்படும் மோட்டார்களை உற்பத்தி செய்ய துவங்கப்பட்டது.

வாடிக்கையாளர் தேவையறிந்து, அவர்களின் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்து குறுகிய காலத்தில் விற்பனை செய்தனர். ஐ.எஸ்.ஒ., 9001 தரக்கட்டுப்பாடு கொண்டு வந்த சமயத்தில் 2003ம் ஆண்டிலிருந்து சான்றிதழ் பெற்று, இன்று வரை அதற்கேற்ப உற்பத்தி செய்து வருகிறார்கள்.

கால மாற்றத்திற்கேற்ப ஸ்டார்க் அதனுடைய மோட்டார்களையும் உலகத்தரத்திற்கேற்ப உற்பத்தி செய்கிறது. 2022ம் ஆண்டில், 'வைபிராட்டர்மோட்டார்ஸ்' என்ற மோட்டார் வகைகளை வடிவமைத்து உற்பத்தி செய்து வருகிறது. இவ்வகையான மோட்டார்கள் கல்குவாரி, எம் சாண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மணலை சலித்து பிரித்தெடுப்பதற்காக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய எச்.பி., வைப்ரேட்டர்கள், தீப்பெட்டி தொழிற்சாலை, தங்க நகை கூடம் மற்றும் அரிசி ஆலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மோட்டார்கள் 10 நியூட்டன் முதல் 60,000 நியூட்டர் வரையிலான அதிர்வு அழுத்தங்கள் தரக்கூடியவை.

ஸ்டார்க் மோட்டார்ஸ் நிறுவனர் முத்துசாமி கூறியதாவது: ஸ்டார்க் மோட்டார்கள் அனைத்தும் உள்கட்டமைப்பிலேயே திறம்பட வடிவமைத்து, உற்பத்தி செய்யப்படுகின்றன. அனைத்து மோட்டார்களும் ஐ.எஸ்.ஐ., சான்றிதழுடன் விற்பனை செய்யப்படுகின்றன. முதல் தரமான மூலப்பொருட்களான, எஸ்.கே.எப்., பேரிங், 99.99 சதவீதம் சுத்தமான தாமிரக்கம்பிகள், ஜி.ஆர்., 20 காஸ்டிங்க ஆகியவற்றோடு கைதேர்ந்த தொழில்நுட்பம்தான் ஸ்டார்க் மோட்டார்சின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

வரும் காலங்களில் உலகத்தரம் வாய்ந்த பம்புகளை ஸ்டார்க் இன்ஜினியர்ஸ் என்கின்ற எங்களது மற்றுமொரு கம்பெனியில் தயாரிக்க உள்ளோம். உள்நாட்டு சந்தையோடு ஏற்றுமதியையும் அதிகப்படுத்துவதே எங்களது வருங்கால திட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டார்க் மோட்டார்ஸ் நிறுவனர் முத்துசாமி, கொடிசியா, சிட்டார்க், டான்ஸ்டியா ஆகிய சங்கங்களின் முன்னாள் தலைவர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் முன்னாள் தேசிய உறுப்பினர் ஆவார். நிறுவனர் முத்துசாமியின் மகன்கள் சதீஷ்குமார், கோகுல் இருவரும் இந்நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல கடினமாக உழைத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us