/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமெரிக்காவில் 35 நிமிடங்களில் நிறுவனம் துவங்கலாம்! கோவை தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு
/
அமெரிக்காவில் 35 நிமிடங்களில் நிறுவனம் துவங்கலாம்! கோவை தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு
அமெரிக்காவில் 35 நிமிடங்களில் நிறுவனம் துவங்கலாம்! கோவை தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு
அமெரிக்காவில் 35 நிமிடங்களில் நிறுவனம் துவங்கலாம்! கோவை தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு
ADDED : பிப் 05, 2025 06:27 AM

கோவை : உலக சந்தைக்கு, கோவை எம்.எஸ்.எம்.இ.,களை தயார்படுத்துவது தொடர்பான நான்கு நாள் சர்வதேச கருத்தரங்கு, கோவை, கொடிசியா வளாகத்தில் நேற்று துவங்கியது.
கொடிசியா சார்பில் நடக்கும் இந்நிகழ்வின் துவக்க விழாவுக்கு, கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார்.
ஜார்ஜியா தொழில் வர்த்தக சபை (ஜி.ஐ.ஏ.சி.சி.,) முன்னாள் தலைவர் ராஜ் பேசியதாவது:
இந்தியாவில், கோவைதான் வர்த்தகத்துக்கு சரியான நகரம். இங்குள்ள இளம் தலைமுறையின் எண்ணிக்கை, கூட்டுக்குடும்ப முறை போன்றவற்றால், லைப்ஸ்டைலுக்கான நுகர்வு பெரிதாக இருக்கிறது. எனவே, அமெரிக்க நிறுவனம் இங்கு வர்த்தகம் செய்யவே விரும்பும்.
35 நிமிடங்களில் தொழில்
அமெரிக்காவில் நிறுவனம் துவங்குவது எளிது. வெறும் 35 நிமிடங்களில், நிறுவனம் துவக்கியதற்கான உரிமம், உங்கள் கையில் வந்து விடும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா, கனடா, மெக்சிகோ நாடுகள் மீது வர்த்தக வரியை அதிகரித்திருக்கிறார்; இந்தியா மீது விதிக்கவில்லை. இது பெரும் வாய்ப்பு.
சீனா, இவ்வளவு பெரிய பொருளாதார பலம் மிக்க நாடாக இருப்பதற்கு, பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு, சீனாவுக்கான அமெரிக்க சந்தை ஆகியவைதான் காரணம்.
அதைப்பயன்படுத்தி, அசுர வேகத்தில் வளர்ந்த சீனா, சூப்பர் கம்ப்யூட்டர், ஏ.ஐ., மின் வாகனங்கள் என, அமெரிக்காவின் தலைமைத்துவத்துக்கே சவால் விட்டு, பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துள்ளது.
இந்தியா மீது பார்வை
மாற்று சக்தியை அமெரிக்கா தேடுகிறது. வியட்நாம், தைவான், சிங்கப்பூர், மலேசியா போன்றவை மிகச்சிறு நாடுகள். இதனால், அமெரிக்கா இயல்பாகவே இந்தியா பக்கம் திரும்பியிருக்கிறது.
இந்தியர்கள் அபார திறன் கொண்டவர்கள். குறிப்பாக தமிழ்நாட்டில், படித்த மக்கள் தொகை அதிகம்.
இங்குள்ளவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்பவர்கள். இதுவும் கோவைக்குச் சாதகம். தொழில்நுட்பம், காஸ்டிங்ஸ், பவுண்டரி, அப்பேரல் என அனைத்துத் துறையிலும் நிபுணத்துவம் கொண்டது கோவை.
போக்குவரத்து வசதிகளும் சாதகம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உலகுக்கே உற்பத்திப் பொருட்களை விற்பவர்களாக, கோவை தொழில்துறையினர் மாற முடியும். அமெரிக்காவிலும் முதலீடு செய்யலாம். இங்கிருந்தும் ஏற்றுமதி செய்யலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஜார்ஜியா தொழில் வர்த்தக சபை பெருந்தலைவர் கிரேஸ் முல்தானி, தலைவர் ஜெயந்த் ஜோஷி, கொடிசியா துணைத் தலைவர் சஷிகுமார், செயலாளர் யுவராஜ், பொருளாளர் பொன்ராம், மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு மைய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.