/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கூடைப்பந்து போட்டி துவக்கம்; எம்பியடிக்கும் 41 அணி வீரர்கள்
/
மாநில கூடைப்பந்து போட்டி துவக்கம்; எம்பியடிக்கும் 41 அணி வீரர்கள்
மாநில கூடைப்பந்து போட்டி துவக்கம்; எம்பியடிக்கும் 41 அணி வீரர்கள்
மாநில கூடைப்பந்து போட்டி துவக்கம்; எம்பியடிக்கும் 41 அணி வீரர்கள்
ADDED : மார் 30, 2025 11:09 PM

கோவை; மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், 41 அணி வீரர்கள் 'லீக்' முறையில் விளையாடி வருகின்றனர்.
தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான, கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே கூடைப்பந்து மைதானத்தில் துவங்கியது.
இதில், 38 மாவட்டங்களும், கோவை, துாத்துக்குடி, சென்னை மாவட்டங்களுக்கு கூடுதலாக ஒரு அணி என, 41 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஏப்., 2ம் தேதி வரை முதல் மூன்று நாட்களுக்கு லீக் போட்டியும், கடைசி இரண்டு நாட்கள் 'நாக் அவுட்' முறையிலும் போட்டிகள் நடக்கின்றன.
ஒய்.எம்.சி.ஏ., கூடைப்பந்து மைதானத்திலும் போட்டி நடைபெறும் நிலையில், முதல் நாளில் நீலகிரி அணி, 64-58 என்ற புள்ளிகளில் பெரம்பலுார் அணியையும், கோவை அணி, 91-30 என்ற புள்ளிகளில், திருநெல்வேலி அணியையும் வென்றது.
அரியலுார் அணி, 27-18 என்ற புள்ளிகளில் கள்ளக்குறிச்சி அணியையும், துாத்துக்குடி 'ஏ', 66-20 என்ற புள்ளிகளில் விருதுநகர் அணியையும், வேலுார் அணி, 65-22 என்ற புள்ளிகளில் திருப்பத்துார் அணியையும், சேலம் அணி, 88-52 என்ற புள்ளிகளில் கோவை 'பி' அணியையும் தோற்கடித்தன.
திருவாரூர் அணி, 72-41 என்ற புள்ளிகளில் தர்மபுரி அணியையும், சென்னை ஏ அணி, 91-17 என்ற புள்ளிகளில் கரூர் அணியையும், தேனி அணி, 94-67 என்ற புள்ளிகளில் கன்னியாகுமரி அணியையும், தஞ்சை அணி, 69-29 என்ற புள்ளிகளில், சென்னை பி அணியையும் வென்றன.
தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு, கோப்பை வழங்கப்படும். சிறப்பாக விளையாடும், 12 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை தமிழ்நாடு மாநில அளவிலான அணிக்கு தயார்ப்படுத்த உள்ளனர்.