/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான 'அலுமினி ஹாக்கி'; வெற்றி முனைப்பில் 16 அணிகள் களம்
/
மாநில அளவிலான 'அலுமினி ஹாக்கி'; வெற்றி முனைப்பில் 16 அணிகள் களம்
மாநில அளவிலான 'அலுமினி ஹாக்கி'; வெற்றி முனைப்பில் 16 அணிகள் களம்
மாநில அளவிலான 'அலுமினி ஹாக்கி'; வெற்றி முனைப்பில் 16 அணிகள் களம்
ADDED : ஏப் 10, 2025 11:22 PM

கோவை; மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான 'அலுமினி ஹாக்கி டிராபி' போட்டியில், 16 கல்லுாரி அணிகள் களம் இறங்கியுள்ளன.
பி.பி.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியின் உடற்கல்வித் துறை சார்பில் ஏழாவது 'அலுமினி ஹாக்கி டிராபி' போட்டி நேற்றும், இன்றும் நடக்கிறது. மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டியில், 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
பி.பி.ஜி., கல்வி நிறுவனங்களின் சேர்மன் தங்கவேலு போட்டிகளை துவக்கிவைத்தார். முதல் போட்டியில், பி.எஸ்.ஜி., 'பி' அணியும், பார்க் கல்லுாரி 'பி' அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில், 2-1 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி., அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து, எச்.ஐ.சி. இ.டி., அணி, 3-2 என்ற கோல் கணக்கில் பி.பி.ஜி., அலுமினி 'பி' அணியை வென்றது. எச்.ஐ.டி., அணி, 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி அணியையும், ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரி அணி, 6-0 என்ற கோல்களில் பார்க் கல்லுாரி 'ஏ' அணியையும் வென்றன.
தமிழ்நாடு வேளாண் பல்கலை அணி, 3-2 என்ற கோல்களில் பி.பி.ஜி., ஐ.டி., அணியையும், நாமக்கல் பாவை கல்லுாரி அணி, 6-1 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி., 'ஏ' அணியை வென்றன. தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.