/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான சைக்கிளிங் போட்டி; எஸ்.ஆர்.எஸ்.ஐ., மாணவிக்கு தங்கப்பதக்கம்
/
மாநில அளவிலான சைக்கிளிங் போட்டி; எஸ்.ஆர்.எஸ்.ஐ., மாணவிக்கு தங்கப்பதக்கம்
மாநில அளவிலான சைக்கிளிங் போட்டி; எஸ்.ஆர்.எஸ்.ஐ., மாணவிக்கு தங்கப்பதக்கம்
மாநில அளவிலான சைக்கிளிங் போட்டி; எஸ்.ஆர்.எஸ்.ஐ., மாணவிக்கு தங்கப்பதக்கம்
ADDED : நவ 06, 2024 10:27 PM
மேட்டுப்பாளையம் ; அன்னுாரில் நடந்த மாநில அளவிலான ரோடு சைக்கிளிங் போட்டியில், பெண்கள் அணியில் காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் பெற்று, தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அன்னுார் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில், எஸ்.ஜி.எப்.ஐ., சார்பில் மாநில அளவிலான ரோடு சைக்கிளிங் போட்டி நடைபெற்றது. இதில் டைம் டிரையல், மாஸ் ஸ்டார்ட் ஆகிய போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில் பங்கேற்ற பெண்கள் அணியில், காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி நவீனா (14 வயது பிரிவு) டைம் டிரையலில் தங்கப் பதக்கமும், மாஸ் ஸ்டார்டில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
மாணவி சாதனா ஸ்ரீ (19 வயது பிரிவு) டைம் டிரையல் மற்றும் மாஸ் ஸ்டார்டிலும் வெண்கல பதக்கம் வென்றார். மாணவி கார்த்தியாயினி (19 வயது பிரிவு) டைம் டிரையல் மற்றும் மாஸ் ஸ்டார்டில் வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்த மூன்று மாணவியரும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளி தாளாளர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் ஜெயகண்ணன், பள்ளி முதல்வர் சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.