ADDED : செப் 13, 2026 08:43 PM
அன்னுார்: மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய சைக்கிள் கழகம் மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன் சார்பில், பெண்களுக்கான மாநில அளவிலான சைக்கிள் போட்டி, கெம்பநாயக்கன்பாளையத்தில் நடந்தது.
எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் பள்ளி செயலாளர் ஜெய கண்ணன் துவக்கி வைத்தார். டைம் டிரையல் மற்றும் மாஸ் ஸ்டார்ட் அடிப்படையில் போட்டி நடந்தது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில், சென்னை ஈஷா குட்டி, கோவை தீக்சிதா, திருச்சி புவனேஸ்வரி ஆகியோர் வென்றனர். எலைட் இளையோர் பிரிவில், சென்னை ருசிரா பிரபாலா, கோவை நவீனா, ஸ்மிருதி, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஈரோடு சன்மிதா, கோவை ரக்சிதா, தஞ்சாவூர் மாய பிரகாஷ், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், திருப்பூர் சிர்பிகா, கோவை தீக்சிதா, சம்ருதா ஆகியோர் ஆகியோர் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு சைக்கிள் அசோசியேசன் செயலாளர் விக்னேஷ் குமார், பொருளாளர் பழனி, சென்னை சைக்கிளிங் அசோசியேசன் நிர்வாகி கார்த்திக் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.
