/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்.ல் பச்சிளம் குழந்தைக்கான அதிநவீன சிகிச்சை பிரிவு
/
கே.எம்.சி.எச்.ல் பச்சிளம் குழந்தைக்கான அதிநவீன சிகிச்சை பிரிவு
கே.எம்.சி.எச்.ல் பச்சிளம் குழந்தைக்கான அதிநவீன சிகிச்சை பிரிவு
கே.எம்.சி.எச்.ல் பச்சிளம் குழந்தைக்கான அதிநவீன சிகிச்சை பிரிவு
ADDED : செப் 26, 2025 05:24 AM
'வ யிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிந்தால், லேசர் கருவி வாயிலாக சிகிச்சை அளிக்கும் வசதி, பச்சிளம் குழந்தைகளுக்கான பிரத்யேக அதநவீன சிகிச்சைப்பிரிவில் உள்ளது,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமதி கூறினார்.
அவர் கூறியதாவது:
பச்சிளம் குழந்தைகள் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற சிறப்பு மருத்துவர்கள் குழுவாக இணைந்து இங்கு பணியாற்றுகிறோம். ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் பாதிப்புக்கு ஏற்ப நவீன சிகிச்சை அளிக்கிறோம்.
பிரவச காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஸ்கேன் பரிசோதனைகளும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது ஒரு பெண் கர்ப்பம் அடைந்தது முதல் பிரசவம் ஆகும் வரை உள்ள அனைத்து ஸ்கேன் பரிசோதனைகளும் இப்பிரிவில் மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தைகளுக்கான எக்கோ பரிசோதனை, குழந்தையின் மூளையில் பாதிப்பு இருந்தால் கண்டறிய நியூரோ சோனோகிராம் பரிசோதனை வசதியும் உள்ளது.
கருவில் உள்ள குழந்தைக்கு மரபணு தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். அதை கண்டறிய ரத்த பரிசோதனை, பனிக்குட நீர் பரிசோதனை, நஞ்சு எடுத்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையயும், குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கும்பட்சத்தில், உரிய சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது.
இரட்டை குழந்தை பிரசவத்தில் பல்வேறு சவால்கள் உள்ளன. காரணம், ஒரே நஞ்சுதான் இரண்டு குழந்தைகளுக்கும் இருக்கும். எனவே, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் பாதிப்பு ஏற்படலாம். இதை சரி செய்ய குழந்தைகள் வயிற்றுக்குள் இருக்கும்போதே, லேசர் கருவி வாயிலாக சிகிச்சை அளிக்கும் வசதி இங்குள்ளது.
மேலும், கே.எம்.சி.எச். நியோநேட்டல் ஐ.சி.யூ., பீடியாட்ரிக் நியூராலஜி, பீடியாட்ரிக் கார்டியாலஜி, பீடியாட்ரிக் சர்ஜரி, ஆர்தோபெடிக்ஸ் பிரிவுகளில் அனுபவம் உள்ள மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். கருவில் உள்ள குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், பாதிப்புக்கு ஏற்ப பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் கலந்தாலோசித்து, சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு, 87548 87568.
இவ்வாறு, அவர் கூறினார்.