/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 5,6 தேதிகளில் மாநில அறிவியல் கண்காட்சி
/
கோவையில் 5,6 தேதிகளில் மாநில அறிவியல் கண்காட்சி
ADDED : டிச 03, 2025 06:46 AM
கோவை: பள்ளிக் கல்வித்துறை சார்பில், 8 முதல் 10ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி, கோவையில் வரும் 5, 6 தேதிகளில் நடைபெறவுள்ளது.
தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்கள் இதில்பங்கேற்கவுள்ளனர். கண்காட்சியில், மாணவர்களின் அறிவியல் மற்றும் விண்வெளி ஆர்வத்தைத் தூண்டும் வகையில், இஸ்ரோவின் நடமாடும் அறிவியல் கண்காட்சியகமான, 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' வாகனம் வரவழைக்கப்பட உள்ளது.
இந்த வாகனத்தில் ராக்கெட் ஏவுதள வாகனங்கள், பல்வேறு செயற்கைக்கோள்கள், இந்தியாவின் பெருமையான சந்திரயான்- 1 மற்றும் மங்கள்யான் விண்கலங்களின் மாதிரிகள், மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.
கோவை மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் நோக்கில், இந்த கண்காட்சி, நவ இந்தியா ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடத்தப்படுகிறது. குறைந்தது 2,000 மாணவர்கள் பார்வையிடுவர்' என தெரிவித்தனர்.

