/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில சப்-ஜூனியர் கபடி கோவை அணி வீரர் தேர்வு
/
மாநில சப்-ஜூனியர் கபடி கோவை அணி வீரர் தேர்வு
ADDED : டிச 23, 2024 04:32 AM

கோவை : நாகை மாவட்டத்தில் நடக்கும், மாநில சப்-ஜூனியர் கபடி போட்டிக்கான மாவட்ட அணி வீரர்கள் தேர்வு நடந்தது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில், 34வது மாநில சப்-ஜூனியர் ஆண்கள் கபடி போட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவன வளாகத்தில் வரும், 27, 28, 29ம் தேதிகளில் நடக்கிறது.
இதற்கான, கோவை மாவட்ட அணி வீரர்கள் தேர்வு, நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி கபடி மைதானத்தில் நடந்தது. 2009ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி அல்லது அதன் பிறகு பிறந்தவர்கள் (16 வயதிற்குள்), 55 கிலோ எடைக்குள் இருந்த வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், 80 வீரர்கள் பங்கேற்ற நிலையில் ஆடுகளத்தில் ரெய்டு, டிபென்ஸ் உள்ளிட்ட திறன் அடிப்படையில், 20 பேர் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில், 12 பேர் போட்டித் திறன் அடிப்படையில், தேர்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் தண்டபாணி தெரிவித்தார்.