/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்ஸ்பெக்டர்களுக்கு ஸ்டேஷன் ஒதுக்கீடு
/
இன்ஸ்பெக்டர்களுக்கு ஸ்டேஷன் ஒதுக்கீடு
ADDED : டிச 30, 2025 05:02 AM
கோவை: கோவை மாநகரில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்தும், எஸ்.ஐ.,ஆக இருந்து பதவி உயர்வு பெற்றவர்களை, இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கவும் ஐ.ஜி., செந்தில்குமார் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, பதவி உயர்வு பெற்ற விவேக்குக்கு, திருப்பூர், குண்டடம் ஸ்டேஷன் ஒதுக்கப்பட்டுள்ளது. நீலகிரி அருவங்காடு --செல்லமணி, கோட்டூர் - ஜெகதீசன், நெகமம் -- நந்தகுமார், குன்னூர் ஸ்டேஷனுக்கு சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருவாரூர் ஆகிய இடங்களில் இருந்து கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட 22 இன்ஸ்பெக்டர்களுக்கும் போலீஸ் ஸ்டேஷன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இடமாற்றம் மற்றும் பதவி உயர்வின் அடிப்படையில் 27 இன்ஸ்பெக்டர்களுக்கு ஸ்டேஷன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

