/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
/
எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 29, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: உத்தரபிரதேசம் மாநிலம் சம்பாலில் முஸ்லிம்கள் மூவர் போலீசாரால் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து உக்கடத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட பொருளாளர் இக்பால் தலைமை வகித்தார்.
மாநில பேச்சாளர் அபுதாகீர் பேசுகையில் இத்தகைய படுகொலை ஆர்.எஸ்.எஸ்., ஆல் நடத்தப்படுகிறது. ஆர். எஸ்.எஸ். உள்ளவரை எஸ்.டி.பி.ஐ., இருக்கும். சிறையில் அடைத்தாலும் எங்கள் நடவடிக்கை தொடரும் என்றார். மாவட்ட பொது செயலாளர் அப்துல்காதர், செயலாளர் முகமது இசாக், துணை தலைவர் சிவகுமார், மற்றும் பலர் பங்கேற்றனர்.

