/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை
/
பஸ் ஸ்டாண்டை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை
ADDED : ஏப் 27, 2025 09:17 PM

மேட்டுப்பாளையம் : காரமடையில் பஸ் ஸ்டாண்டை செயல்பாட்டுக்கு கொண்டு வர காரமடை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காரமடை நகராட்சி அலுவலகம் அருகில் காரமடை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் காரணமாக, பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளே பஸ்கள் வருவதில்லை. மெயின் ரோட்டிலேயே நின்று செல்கின்றன.
காரமடை நகரில் இதனால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் ஸ்டாண்டை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நகராட்சி தலைவர் உஷா, போலீஸ் எஸ்.ஐ.,ராஜேஷ்குமார், தேசிய நெடுஞ்சாலை மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆகியோர் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லும் வழியில் உள்ள பாதைகளை விரிவுபடுத்தவும், சாலையில் ரவுண்டானா அமைக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து நகராட்சி தலைவர் உஷா கூறுகையில், 'தற்போது பஸ்கள் மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டின் ஓரத்தில் நின்று செல்வதால், பெண்கள் பெரியவர்கள், ஒதுங்குவதற்கு கூட நிழற்குடை அமைக்க முடியாத நிலை உள்ளது.
பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், பயணிகள் பொதுமக்கள் பாதிக்காதவாறு, செயல்படாத பஸ் ஸ்டாண்டை செயல்பாட்டுக்கு கொண்டு வர, அதற்கு தேவையான அனைத்து விரிவாக்க பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும், என்றார்.