/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளத்தில் சிக்காமல் இருக்க நடவடிக்கை
/
வெள்ளத்தில் சிக்காமல் இருக்க நடவடிக்கை
ADDED : மே 27, 2025 09:15 PM

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம்,மேட்டுப்பாளையம் அருகே வனவிலங்குகள் ெவள்ளத்தில் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக, பில்லூர் அணை நிரம்பி, பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகள் பவானி ஆற்றை கடந்து செல்வதும், அதில் தண்ணீர் குடிப்பதும் வழக்கமான நிகழ்வாக உள்ளது. அவ்வாறு வரும் மான் கூட்டங்கள் மற்றும் பிற வனவிலங்குகள் ஆற்று வெள்ளத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனவிலங்குகள் ஆற்று வெள்ளத்தில் சிக்காமல் இருக்க, வனவிலங்குகள் அதிகம் வரும் பகுதிகளில் வனப்பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர், என்றனர்.---