ADDED : ஜூலை 03, 2026 04:02 AM
அன்னூர்: சொக்கம்பாளையத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு, ஐந்து விடுதிகள் உள்ளன. இவற்றில் நான்காம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான, 300 மாணவ, மாணவியர் தங்கி உள்ளனர்.
கால்நடைத்துறை அமைச்சர் கமலி நேற்று சொக்கம்பாளையத்தில் விடுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது ஊழியர்கள், அமைச்சரிடம் கூறுகையில், 'சமையலர், இரவு காவலர், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக இருக்கிறது,' என தெரிவித்தனர்.
அமைச்சர் பதிலளிக்கையில், 'காலி பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். நாப்கின் எரிக்கும் மெஷின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.
இதையடுத்து குரூப் 2ஏ தேர்வில் மாநில அளவில் (அருந்ததியர் பிரிவில்) முதலிடம் பெற்ற விஷ்ணு பிரியா இல்லத்திற்குச் சென்று பாராட்டு தெரிவித்தார். அமைச்சருடன், தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
