தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: நீர் வரத்து அதிகரிக்க நடவடிக்கை

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: நீர் வரத்து அதிகரிக்க நடவடிக்கை

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: நீர் வரத்து அதிகரிக்க நடவடிக்கை


UPDATED : ஜூன் 07, 2026 07:29 PM

ADDED : ஜூன் 07, 2026 07:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 07:29 PM ADDED : ஜூன் 07, 2026 07:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கவுசிகா நதி மேம்பாட்டு சங்க தலைவர் செல்வராஜ், 'அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சூலூர், அவிநாசி, கவுண்டம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்களில் மிக குறைவான தண்ணீர் வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இதை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்' என்று முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் நீர்வள ஆதாரத்துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இதற்கு நீர்வளத்துறை செயற்பொறியாளர் அப்புசாமி அளித்துள்ள பதிலில், 'வாகராயம்பாளையம், கிட்டாம்பாளையம், குளத்துப்பாளையம், செம்மாண்டம்பாளையம் கிராமங்களில் இத்திட்டத்தில் தண்ணீர் தடையின்றி செல்வதற்காக புதிய கட்டுப்பாட்டு வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. குழாய் அடைப்புகளும் சரி செய்யப்பட்டுள்ளன.

பொன்னேகவுண்டன்புதூர், வடுகபாளையம், தெக்கலூர், தண்ணீர் பந்தல், சூரிபாளையம் பகுதிகளில் குழாய்களில் இருந்த கசிவுகள் சரி செய்யப்பட்டு, ஏர் வால்வு, ஓ.எம்.எஸ். கருவிகளை சுத்தம் செய்து வருகிறோம்.

வையம்பாளையம், சர்க்கார் சாமக்குளம், தேவம்பாளையம் கிராமங்களில் புதிய வால்வுகள் பொருத்தி, கசிவு நீக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் உபரிநீர் வெளியற்றப்பட்டவுடன், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கீழ் உள்ள குளங்களில் தடையின்றி நீர் வழங்கப்படும்' என்று கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us