/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கொரோனா காலத்தை நினைவுபடுத்தும் கதைகள்'
/
'கொரோனா காலத்தை நினைவுபடுத்தும் கதைகள்'
ADDED : ஏப் 09, 2025 12:27 AM

கோவை; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், இலக்கிய சந்திப்பு கூட்டம், தாமஸ் கிளப் அரங்கில் நடந்தது.
பேராசிரியர் சின்னச்சாமி தலைமை வகித்தார். எழுத்தாளர் ரவிச்சந்திரன் அரவிந்தன் எழுதிய, 'உயிரச்சம்' சிறுகதை நுால் மற்றும் அருண்பாலாஜி எழுதிய கட்டுரை நுால் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.
'உயிரச்சம்' நுாலை அறிமுகம் செய்த, பேராசிரியர் ரமேஷ்குமார் பேசியதாவது:
கொரோனா தொற்று காலத்தில், ஒவ்வொருவரும் அந்த நோய் பற்றிய அச்சத்தில் வாழ்ந்ததை நாம் மறந்துவிட முடியாது. அந்த காலத்தின் சூழலை, எழுத்தாளர் ரவிச்சந்திரன் அரவிந்தன், இந்த நுாலில் கதைகளாக எழுதி இருக்கிறார். கொரோனா காலத்தில் நிகழ்ந்த, மரணங்களின் எண்ணிக்கை, அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது.
நேரில் பார்த்த உண்மை சம்பவங்களை, கதைகளாக எழுதி இருக்கிறார். இந்த கதைகள் கொரோனா காலத்தை, நமக்கு மீண்டும் நினைவுபடுத்துகின்றன.
இவ்வாறு, அவர் பேசினார்.
எழுத்தாளர்கள் ரவிச்சந்திரன் அரவிந்தன், அருண் பாலாஜி ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.