/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்னவேடம்பட்டியில் எஸ்.டி.பி. திட்டம் மக்கள், விவசாயிகள் இன்று ஆலோசனை
/
சின்னவேடம்பட்டியில் எஸ்.டி.பி. திட்டம் மக்கள், விவசாயிகள் இன்று ஆலோசனை
சின்னவேடம்பட்டியில் எஸ்.டி.பி. திட்டம் மக்கள், விவசாயிகள் இன்று ஆலோசனை
சின்னவேடம்பட்டியில் எஸ்.டி.பி. திட்டம் மக்கள், விவசாயிகள் இன்று ஆலோசனை
ADDED : ஆக 16, 2025 11:40 PM
கோவை; சின்னவேடம்பட்டியில் எஸ்.டி.பி., அமைப்பது தொடர்பான செயல்முறை விளக்க கூட்டத்துக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சின்னவேடம்பட்டியில் தினமும், 9.95 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்(எஸ்.டி.பி.,) அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
கழிவுநீரை சுத்திகரித்து சின்னவேடம்பட்டி ஏரியில் விடுவதற்கு ஏற்கனவே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கடந்த, 1ம் தேதி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் இதுதொடர்பான செயல்முறை விளக்க கூட்டம் நடைபெற, மாநகராட்சி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
சின்னவேடம்பட்டி பகுதி மக்கள், விவசாயிகள் முறையான அறிவிப்பு வழங்கவில்லை என எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
நாளை மாலை, 3:00 மணிக்கு, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் செயல்முறை விளக்க கூட்டம் நடக்கிறது.
சின்னவேடம்பட்டி பகுதி மக்கள் பங்கேற்று, தங்களுடைய சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள மாநகராட்சி நிர்வாகமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் அழைப்புவிடுத்துள்ளது.
இந்நிலையில், சின்னவேடம்பட்டி மக்களும், விவசாயிகளும் இன்று மதியம், 3:00 மணியளவில் சின்னவேடம்பட்டி கவுமார மடாலயம் திருமண மண்டபத்தில் கலந்து ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.